/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை இல்லை -- கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு

ADDED : டிச 01, 2025 06:32 AM

தளவாய்புரம்: அரசு வட்டார தலைமை ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்கள், மகப்பேறு அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதால் கர்ப்பிணிகள் தேவையற்ற அலைச்சலுக்கு ஆளா கின்றனர்.
தளவாய்புரம் அருகே ஜமீன் கொல்லங் கொண்டானில் வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. 40 படுக்கை வசதியுடன், சராசரியாக தினமும் 120 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் இங்கு பல் மருத்துவம், பொது, சித்த, மகப்பேறு மருத்துவ பிரிவுகளும் அறுவை சிகிச்சை, ரத்த வங்கி, பரிசோதனை மையம் ஆகியவற்றுடன் செயல்படுகிறது.
மூன்று வருடங்களுக்கு முன் வரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து வாரம் இரண்டு நாட்கள் சிறப்பு டாக்டர் வந்து மகப்பேறு அறுவை சிகிச்சை அளித்து சென்றார். மத்திய அரசின் சிறப்பு நிதியிலிருந்து அறுவை சிகிச்சைக்கு ஒரு நபருக்கு ரூ.1500 என டாக்டருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில் மகப்பேறு டாக்டர் வருவது நிறுத்தப்பட்டு மகப்பேறு சிகிச்சை பிரசவத்திற்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தை கவனிப்பு அறை, அறுவை சிகிச்சை மையம் என வசதிகள் இருந்தும் மகப்பேறு டாக்டர்கள் வராததால் கர்ப்பிணி பெண்கள் தேவையற்ற அலை கழிப்பிற்கு உள்ளாகின்றனர்.
வட்டார தலைமை ஆரம்ப சுகாதார மையமாக உள்ள இங்கு மகப்பேறு டாக்டர் நியமிப்பது மூலம் கர்ப்பிணிகள் சிரமத்தை குறைக்கலாம் என்பதே சுற்றுவட்டாரப் பகுதியினரின் எதிர்பார்ப்பு.