தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பிரச்சனையும் தீர்வும் / கார் பார்க்கிங், சுகாதார வளாக வசதிகள் இல்லை; ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதிப்படும் ஆண்டாள் பக்தர்கள்

பிரச்சனையும் தீர்வும் / கார் பார்க்கிங், சுகாதார வளாக வசதிகள் இல்லை; ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதிப்படும் ஆண்டாள் பக்தர்கள்

பிரச்சனையும் தீர்வும் / கார் பார்க்கிங், சுகாதார வளாக வசதிகள் இல்லை; ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதிப்படும் ஆண்டாள் பக்தர்கள்


UPDATED : நவ 28, 2026 02:07 AM

ADDED : நவ 27, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 02:07 AM ADDED : நவ 27, 2026 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் மாடவீதிகள், ரதவீதிகளில் வீடுகளை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்கள், போதிய சுகாதார வளாகங்கள் இல்லாமல் சிரமம், தேசிய நெடுஞ்சாலையில் பெருகும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி என ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

108 வைணவ தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான வெளியூர் பக்தர்கள் விழா நாட்கள், வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இதில் கார், வேன்களில் வருபவர்கள் மாட வீதிகளிலும், பஸ்களில் வருபவர்கள் ரதவீதிகளில் உள்ள வீடுகளின் வாசல்களை மறைத்தும் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் வெளியில் நடந்து செல்ல கூட முடியாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் போதிய அளவிற்கு சுகாதார வளாக வசதி இல்லாததால் வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலேயே தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதால் துர்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

வடக்கு ரத வீதியில் நாளுக்கு நாள் பெருகும் ரோட்டோர கடைகளின் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதில் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அதிலும் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வந்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

கீழரத வீதியில் தேருக்கு முன் பகுதியில் கடைகள் போட்டி போட்டு நீட்டித்து வருவதாலும், வெளியூர் வாகனங்கள் பாதி ரோட்டை அடைந்து நிறுத்தப்படுவதாலும் பஸ்கள் எளிதில் செல்ல முடியவில்லை.

திருப்பாற்கடல் அருகே ராஜபாளையம் ரோட்டில் சுகாதார வளாகம் இருந்தும், பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளது. இத்தகைய பிரச்சினைகளால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் தினமும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவை பார்க்கிங் வசதி



ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் வெளியூர் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் ரத வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டாள் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் வீட்டின் வாசல்களை மறைத்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். உடனடியாக தற்காலிக பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும்.

- போஸ், ஆட்டோ டிரைவர்.

* கூடுதல் சுகாதார வளாகம் தேவை

வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வரும் நிலையில் ஆடிப்பூர கொட்டகையில் மட்டும் ஒரே ஒரு சுகாதார வளாகம் உள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே, ரதவீதிகளில் கூடுதல் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்த வேண்டும். ரத வீதிகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

- மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர்.

தீர்வுகள்.

தற்போது கட்டப்பட்டு வரும் பார்க்கிங் இடத்தை சமப்படுத்தி தற்காலிகமாக பக்தர்கள் வாகனங்களை நிறுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பாற்கடலை அடுத்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் செயல்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வடக்கு மாட வீதி பழைய ஸ்டேட் பேங்க் பின்புறம் செயல்படாத நிலையில் உள்ள சுகாதார வளாகத்தையும், முன்பு கீழ ரத வீதியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுகாதார வளாகத்தை மீண்டும் புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வடக்கு ரத வீதியில் பெருகும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us