/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
23 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை ஊழியர்கள் விரக்தி
/
23 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை ஊழியர்கள் விரக்தி
ADDED : ஜூலை 26, 2011 09:54 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு ஊழியர்களுக்கு 23 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு இல்லாததால் விரக்தியில் உள்ளனர்.
நகராட்சிகளில் 1989 க்குமுன் வரை மின்வாரியமே தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை செய்து வந்தது. இதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் வேண்டுகோளின் படி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை நகராட்சிகளே செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி நகராட்சிகளில் 600 தெருவிளக்குகளுக்கு தலா ஒரு வயர்மேன், மின்கம்பி உதவியாளர், 10 மின்கம்பியாளர்களுக்கு ஒரு மின் பாதை ஆய்வாளர் நியமிக்கப்பட்டனர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் மின் கம்பியாளராக வேலையில் சேர்ந்த நபரால், மின்கம்பங்களில் ஏறுவதற்கான உடல் வலிமை, மன வலிமை தற்போது இல்லை. இதன் காரணமாக இப்பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென போராட்டம்பல நடத்தியதன் பலனாக, '' 2008 ஜூலை 26ல் மின்கம்பியாளராக பணிபுரிபவர்கள் மின்பணியாளர் நிலை 1 ஆகவும், மின்கம்பி உதவியாளராக பணிபுரிபவர்கள் மின்பணியாளர் நிலை2 ஆகவும் பதவி உயர்வு வழங்கப்படும் ,''என, அரசுஅறிவித்தது. அதன்படி மின்கம்பி உதவியாளர்களுக்கு மின்பணியாளர் நிலை 2 க்கான பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வுக்காக காத்திருந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போதைய அரசாவது தெருவிளக்கு பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி, பதவி உயர்வு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.