/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் வந்தும் பலனில்லை: தெருக்களின் வாறுகால்களில் கழிவுநீரால் தொற்று
/
விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் வந்தும் பலனில்லை: தெருக்களின் வாறுகால்களில் கழிவுநீரால் தொற்று
விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் வந்தும் பலனில்லை: தெருக்களின் வாறுகால்களில் கழிவுநீரால் தொற்று
விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் வந்தும் பலனில்லை: தெருக்களின் வாறுகால்களில் கழிவுநீரால் தொற்று
UPDATED : மே 01, 2025 07:11 AM
ADDED : மே 01, 2025 05:52 AM

விருதுநகர்: விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தும் பலனில்லை. இன்றளவும் அனைத்து கழிவுநீரும் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படாமல் வாறுகால்களில் வெளியேற்றப்படுவதால் நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.
விருதுநகர் நகராட்சியில் 2008ல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போதே பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அப்போதைய கமிஷனர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பல வீடுகளுக்கு திருட்டு இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.
2020 முதலே அதன் ஒழுகரை குழாய்கள் சேதமாகி அடிக்கடி கழிவுநீர் வெளியேறின. மக்களும் விழிப்புணர்வு இன்றி பல்வேறு பிளாஸ்டிக், பாட்டில் போன்ற கழிவு பொருட்களை கழிவுநீரோடு விட்டு அடைப்பு ஏற்பட காரணமாக வித்திட்டனர்.
இந்நிலையில் 2020 முதலே கடந்த 5 ஆண்டுகளில் ஆங்காங்கே மேன்ஹோல்கள் நிறைந்து கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையானது. இதனால்காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், குடும்பஸ்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வரைபடம் தொலைந்து விட்டதால் எந்தெந்த இணைப்புகள் எங்கெங்கு செல்வது என்று தெரியாத சூழல் ஏற்பட்டது. மேலும் பிட்டர் பணியிடமும் குறைக்கப்பட்டதால் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளில் அலட்சியம் தொடர்ந்தது.
இது குறித்து நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தும் உள்ளனர். இன்றளவும் பிரச்னை எதுவும் நிரந்தரமாக தீர்க்கப்படவில்லை. கழிவுநீர் வெளியேறினால், அங்கிருந்து அருகே உள்ள வடிகால் அல்லது வாறுகால்களுக்கு இணைப்பு கொடுத்து அதன் வழியாக கழிவுநீரை வெளியேற்றுகின்றனர்.
அல்லம்பட்டியிலுள்ளசுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் செல்வதற்கான வழி குறைவாகவே உள்ளது. நகர்ப்பகுதிகளில் திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால் தொற்றும், நோய் அபாயமும் அதிகம் உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பில் பாதாளசாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.