/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை வழி சிறப்பு ரயில் இல்லை
/
செங்கோட்டை வழி சிறப்பு ரயில் இல்லை
ADDED : நவ 21, 2024 01:32 AM
விருதுநகர்:சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களுக்கு மதுரை, செங்கோட்டை வழி கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படாததால் செங்கோட்டை வழி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனுக்கு தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் சேலம் - கோவை வழி செங்கனுார் கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் பெருநகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
2022ல் எர்ணாகுளம் முதல் தாம்பரம் வரை புனலுார் - செங்கோட்டைக்கு விருதுநகர் வழி இயக்கப்பட்டது. இந்த ஆண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், கோவை, பழனி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் வரை சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில் இம்மாதம் 20 முதல் 2025 ஜன. 16 வரை இயக்கப்படும் என்று பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த ரயில் சேவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். செங்கோட்டை வழியாக ரயிலை இயக்க தென்னக ரயில்வே முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.