/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பதித்து ஆறு மாதமாகியும் தண்ணீர் வினியோகம் இல்லை
/
குழாய் பதித்து ஆறு மாதமாகியும் தண்ணீர் வினியோகம் இல்லை
குழாய் பதித்து ஆறு மாதமாகியும் தண்ணீர் வினியோகம் இல்லை
குழாய் பதித்து ஆறு மாதமாகியும் தண்ணீர் வினியோகம் இல்லை
ADDED : டிச 08, 2024 06:07 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 21வது வார்டு கருணாநிதி காலனியில் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி 21வது வார்டு திருத்தங்கல் கருணாநிதி காலனியில் மூன்று தெருக்கள் உள்ளன.
இங்கு இதுவரையில் புழக்கத்திற்கு என தண்ணீர் வினியோகம் செய்ததில்லை.
இதனைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன்பு மூன்று தெருக்களிலும் புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப்பட்டது.
ஆனால் குழாய் பதித்தும் இதுவரையிலும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதியில் தற்போது பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இது போதாத நிலையில் புழக்கத்திற்கு தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் குளிக்க துணி துவைக்க என அனைத்திற்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். கூலி வேலை செய்யும் இப்பகுதி மக்களால் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.
வெள்ளைச்சாமி, குடியிருப்புவாசி, இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படுகின்ற குடிநீர் போதவில்லை.
எனவே புழக்கத்திற்கு என தண்ணீர் வினியோகம் செய்ய குழாய் பதிக்கப்பட்டு இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
மேல் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படவில்லை.
எனவே ரோட்டை சீரமைத்து விரைந்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.