
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் தடகள போட்டியிலும், உள்ளரங்கு விளையாட்டு போட்டியிலும் வெற்றி பெற்ற மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர் சயான் நீளம் தாண்டுதலிலும், 400 மீட்டர் தடகள போட்டியில் ரியான், இளமாறன், சயான், கிஷோர், 800 மீட்டர் தடகள போட்டியில் பிராங்கிளின் ரேகளன்ட், பீச் வாலிபாலில் கவுதம், மிதுன், டேபிள் டென்னிஸ்சில் முகமது இஷான், வருனிஷ், இனமுல் ஜூசைன், சைவ வெங்கட யோகேஷ், அஸ்வத் சுதன், ஹரிகிருஷ்ணன், மகதி, லத்திகா ஆகிய மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மாணவர்களை நோபிள் கல்வி குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ, துணை தலைவர் நிஜிஷ், ஆசிரியர்கள் பாராட்டினர்.