ADDED : பிப் 13, 2024 05:14 AM
விருதுநகர் : விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர், முதல்வர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தார். துணை தலைவர் நிஜிஷ் முன்னிலை வகித்தார். சங்கல்ப மேலாண்மை நிறுவனத்தின் தலைவர், கல்வி ஆலோசகர் சிவக்குமார்,எஸ்.பி., மாடர்ன் மெட்ரிக் பள்ளி தலைவர் ஜெயபாரதி, சவுத் சைடு மெட்ரிக் பள்ளிதலைவர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் ஆதிகா, முனீஸ்வரன், சக்தி ஹரிணியா, நிஷா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தனர்.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவடிவேல், அருண்பிரியா ஆகியநபர்களுக்கு நோபிள் விருது வழங்கப்பட்டது.
பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மூன்று கிராம் தங்கமும், சான்றும் பரிசாக வழங்கப்பட்டது.
சென்டம் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம், சான்று வழங்கப்பட்டது. கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம், சான்று வழங்கப்பட்டது.