ADDED : ஜன 25, 2025 05:01 AM

விருதுநகர் : விருதுநகர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒரு பக்க மின் துாக்கிகள் செயல்படாததால் நோயாளிகள், உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2021ல் மருத்துவக்கல்லுாரி துவங்கப்பட்டு அதன் கட்டடம் 2022 ஜன.ல் திறக்கப்பட்டது. இதற்கான மருத்துவமனை கட்டடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு அதன் பிறகு திறக்கப்பட்டன.
இந்நிலையில் இவற்றின் ஒரு பக்க மின் துாக்கிகள், தனியாக உள்ள மின் துாக்கிகள் செயல்படாமல் உள்ளன.
சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோருக்கும், புதிதாக சிகிச்சை பெற நான்காவது தளத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் வார்டுகளுக்கு செல்வோருக்கும் கடும் சிரமம் ஏற்படுகிறது.
மின் துாக்கிகளை சரிபார்க்காமல் மருத்துவமனை நிர்வாகம் தாமதித்து வருகிறது. இடது புறமுள்ள மின் துாக்கிகள் மட்டுமே செயல்படுவதால் கூட்ட நெரிசலும் அதிகளவில் உள்ளது.
எனவே மின் துாக்கிகளை சரிவர செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வளாகத்திற்கு உள்ளே நாய்த்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

