/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வராத ஹைமாஸ் விளக்குகள்
/
செயல்பாட்டிற்கு வராத ஹைமாஸ் விளக்குகள்
ADDED : ஆக 11, 2025 03:32 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ராஜபாளையத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை பல்வேறு இடங்களில் அமைக்கபட்டுள்ள உயர்மின் கோபுர விளக்குகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் ஜங்ஷன் சந்திப்பு, கிராம ரோடு இணைப்பு பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு
வன்னியம்பட்டி சந்திப்பு, ஸ்ரீவில்லிபுத்துாரில் சர்ச் சந்திப்பு, காமராஜர் சிலை, கிருஷ்ணன்கோவிலில் குன்னூர் ரோடு சந்திப்பு உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கபட்டு பல மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனை பராமரிக்க செலவுகள் அதிகரிக்கும் என்பதால் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பொறுப்பில் ஏற்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் மின்விளக்குகள் அமைத்தும் பயனற்று
காட்சி பொருளாக நிற்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

