/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டனுாரில் செயல்படாத மினரல் பிளான்ட்
/
கட்டனுாரில் செயல்படாத மினரல் பிளான்ட்
ADDED : ஜூலை 12, 2025 04:22 AM

நரிக்குடி, : நரிக்குடி கட்டனுாரில்மினரல் பிளான்ட் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளதால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர். சீரமைத்து, குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
நரிக்குடி கட்டனுாரில் உப்பு தண்ணீராக இருப்பதால் குடிநீருக்கு மக்கள் சிரமப்பட்டனர். வைகை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் கீழ் வரும் தண்ணீர் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்படுகிறது.
உள்ளூர் தண்ணீரை கலந்து கொடுப்பதால் சுவை இன்றி உள்ளது. சமையலுக்கு பயன்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் மினரல் பிளான்ட் ரூ. பல லட்சங்கள் செலவு செய்து அமைக்கப்பட்டது. 5 ரூபாய் நாணயம் செலுத்தி ஒரு குடம் குடிநீர் பிடித்தனர். மக்களுக்கு பயனுள்ள, சுகாதாரமான குடிநீர் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மினரல் பிளான்ட் பழுதாகி பயன்பாடு இன்றி உள்ளது. அத்துடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
குடிநீர் கிடைக்காததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அலுவலர்களிடம்புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது குடிநீருக்காக மக்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றனர்.
பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதால், பழுதாகி கிடக்கும் மினரல் பிளான்டை சீரமைத்து, குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.