/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் செயல்படாத சிக்னல்கள் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள்
/
சாத்துாரில் செயல்படாத சிக்னல்கள் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள்
சாத்துாரில் செயல்படாத சிக்னல்கள் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள்
சாத்துாரில் செயல்படாத சிக்னல்கள் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள்
ADDED : அக் 26, 2024 04:46 AM

சாத்துார்: சாத்துாரில் செயல்படாத சிக்னல்களால் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கல் தவித்து வருகின்றனர்.
சாத்துார் மதுரை பஸ்ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், பழைய படந்தால் ரோடு சந்திப்பு, முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக போலீசார் டிராபிக் சிக்னல்களை அமைத்துள்ளனர். டிராபிக் சிக்னல்கள் மூலம் சில மாதங்கள் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
தற்போது சிக்னல்கள் செயல்படவில்லை. இவை காட்சி பொருளாக உள்ளன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலை,மாலை நேரங்களில் சிக்னல் செயல்படாததால் பணியில் இருக்கும் போலீசார் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிக்னல் செயல்படாததால் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மதுரை பஸ் ஸ்டாப், முக்குராந்தல் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் சம்பவங்கள் நடக்கிறது.
எனவே சாத்துாரில் செயல்படாமல் உள்ள டிராபிக் சிக்னல்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.