/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத துணை சுகாதார நிலையம் குப்பனாபுரம் மக்கள் பாதிப்பு
/
செயல்படாத துணை சுகாதார நிலையம் குப்பனாபுரம் மக்கள் பாதிப்பு
செயல்படாத துணை சுகாதார நிலையம் குப்பனாபுரம் மக்கள் பாதிப்பு
செயல்படாத துணை சுகாதார நிலையம் குப்பனாபுரம் மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 04, 2025 06:16 AM

சிவகாசி: சிவகாசி அருகே தெற்கு குப்பனாபுரத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படாததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே தெற்கு குப்பனாபுரத்தில் 1985 ல் துணை சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இங்கு தெற்கு குப்பனாபுரம், வடக்கு குப்பனாபுரம், தச்ச குடி, தாழைப்பட்டி, கோபாலன் பட்டி, நல்லு தேவன் பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து சென்றனர். சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த துணை சுகாதார நிலையம் நாளடைவில் செவிலியர் இல்லாமல் செயல்படவில்லை.
கட்டடமும் சேதம் அடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து 2007ல் நலவாழ்வு மையம் சார்பில் சேதம் அடைந்த கட்டடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தொடர்ச்சியாக செயல்படாததால் துணை சுகாதார நிலையம் வளாகம் முழுவதும் முட்புதர்கள் சூழ்ந்து விட்டது. பொதுவாக துணை சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்கள் 24 மணி நேரமும் தங்கி பணிபுரிய வேண்டும் என்பதால் வீடும் உள்ளடக்கியே கட்டப்படும்.
ஆனால் இங்கு நிரந்தரமாக செவிலியர் பணியிடம் இல்லை. இதனால் சிறிய தலைவலி, காய்ச்சல் என்றால் கூட 20 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு அல்லது குன்னுாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே தெற்கு குப்பனாபுரம் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் நிரந்தரமாக தங்கி பணிபுரிய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

