/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத டிராபிக் சிக்னல், சேதமான ரோடு, வாறுகால் * விரக்தியில் விளாம்பட்டி ரோடு பகுதி மக்கள்
/
செயல்படாத டிராபிக் சிக்னல், சேதமான ரோடு, வாறுகால் * விரக்தியில் விளாம்பட்டி ரோடு பகுதி மக்கள்
செயல்படாத டிராபிக் சிக்னல், சேதமான ரோடு, வாறுகால் * விரக்தியில் விளாம்பட்டி ரோடு பகுதி மக்கள்
செயல்படாத டிராபிக் சிக்னல், சேதமான ரோடு, வாறுகால் * விரக்தியில் விளாம்பட்டி ரோடு பகுதி மக்கள்
ADDED : ஜூலை 06, 2025 03:25 AM

சிவகாசி: செயல்படாத டிராபிக் சிக்னல் , சேதமான ரோடு, வாறுகால் என விளாம்பட்டி ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி விளாம்பட்டி ரோடு பகுதியில் ரோடு, வாறுகால் சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது.ரோட்டின் இருபுறமும் வாறுகால் சேதம் அடைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டிலேயே தேங்கி விடுகின்றது. இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகாலை சீரமைக்க வேண்டும். மூன்று ரோடு பிரிந்து செல்லும் இப்பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் ஓரத்தில் சேதம் அடைந்த மின் கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். தவிர ரோடு முழுவதும் பரவிக் கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
பாண்டியன், தொழிலதிபர், விளாம்பட்டி ரோட்டில் இருந்து காளியப்பா நகர் வழியாகச் செல்லும் ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள், கோரைப்புற்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் நீர்நிலைகளுக்கு செல்ல வழி இல்லை. எனவே ஓடையை முழுமையாக துார்வார வேண்டும்.
மணிகண்டன், டீக்கடை உரிமையாளர், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் இந்த ரோடு தான் முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. இந்நிலையில் ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. இதனால் இதில் வருகின்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
பாண்டி, இளநீர் வியாபாரி, இப்பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் நடந்து, வாகனங்களில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டில் உள்ள மணல்களை அப்புறப்படுத்த வேண்டும்.