/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குடிநீர் தொட்டி, திறந்தவெளி கழிப்பறை
/
செயல்படாத குடிநீர் தொட்டி, திறந்தவெளி கழிப்பறை
ADDED : மார் 07, 2024 04:51 AM
ராஜபாளையம்; செயல்படாத குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறையால் சிக்கல், சாக்கடையில் கழிவுகள் தேக்கம் போன்ற பிரச்சினைகளால் ராஜபாளையம் நகராட்சி 24வது வார்டு மக்கள் சிரமப் படுகின்றனர்.
இவ்வார்டுக்குட்பட்டது மலையடிப்பட்டி மெயின் ரோடு அருகே நேதாஜி நகர், சக்தி நகர், காந்தி நகர் குறுக்கு தெருக்கள் . குடியிருப்பு அருகே நாய்கள் அதிகம் சுற்றுவதால் இரவில் தனியாக வருபவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
குறுகலான தெருக்களில் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தாததால் சாக்கடை கழிவுகள் அள்ளுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பொது சுகாதார வளாகம் இல்லாததால் மலையை ஒட்டிய பகுதியை திறந்த வெளியாக பெண்கள் உபயோகிக்கின்றனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. சாக்கடைகளில் தேங்கும் கழிவுகளால் கொசு தொல்லை நோய் பாதிப்பு அபாயம் உள்ளது.
மினி டேங்க் குழாய் சேதமடைந்து இரண்டு மாதங்களை கடந்துள்ளதால் அவசரத்திற்கு உபயோகமின்றி காட்சி பொருளாக மாறி உள்ளது. ரோடுகளின் இணைப்பில் உள்ள வாறுகால் தரைப்பாலங்கள் சேதம் அடைந்துள்ளதை பணிகள் ஒதுக்கியும் தற்போது வரை வேலைகள் தொடங்கவில்லை.

