/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை
/
தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை
தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை
தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை
ADDED : மார் 20, 2024 12:05 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தற்போது மாவட்ட, மண்டல, மாநில அளவிலான உயர் அதிகாரிகளின் வீடியோ கான்ப்ரன்ஸ் மீட்டிங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாலுகா அளவிலான அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளின் மீட்டிங்குகள், மாவட்ட அளவில் விருதுநகரிலும், மண்டல அளவில் திருநெல்வேலி , மதுரையிலும், மாநில அளவில் சென்னையிலும் நேரடியாக நடப்பது வழக்கம். இதில் மக்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
கொரோனா காரணமாக நேரடி மீட்டிங்குகள் தவிர்க்கப்பட்டு தற்போது அதிகளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்து வந்தது. குறிப்பாக மாலை 4:00 மணிக்குமேல் துவங்கும் வீடியோ கான்ப்ரன்ஸ் மீட்டிங்குகள், பணி நேரம் முடிந்தும், இரவு 7:00 மணியை கடந்தும் நடப்பது வழக்கம். இதனால் பெண் அலுவலர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் தற்போது ஒவ்வொரு அரசு துறையின் சார்பில் நடத்தப்படும் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

