/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு நோட்டீஸ்: பா.ஜ., நிர்வாகி கைது
/
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு நோட்டீஸ்: பா.ஜ., நிர்வாகி கைது
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு நோட்டீஸ்: பா.ஜ., நிர்வாகி கைது
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு நோட்டீஸ்: பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : பிப் 03, 2025 04:52 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பரங்குன்றம் அறப்போராட்டத்திற்காக ஸ்ரீவில்லிபுத்துார் பஜார் வீதிகளில் நோட்டீஸ் வழங்கி பிரசாரம் செய்த பா.ஜ., பிரசார அணி மாவட்ட செயலாளர் பிரபாகரனை 56, போலீசார் கைது செய்தனர்.
பிப்ரவரி 4ல் ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடக்கும் அறப்போராட்டத்திற்காக, பா.ஜ., பிரசார அணி மாவட்ட செயலாளர் பிரபாகரன், நேற்று மதியம் ராமகிருஷ்ணபுரம் பஜார் வீதிகளில் மக்களிடம் நோட்டீஸ் வழங்கியும், மெகா போன் மூலம் பிரசாரம் செய்தார்.
டவுன் போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர் இதனையடுத்து பா.ஜ., மாவட்ட செயலாளர் சரவண துரைராஜா, வழக்கறிஞர் சாந்தகுமார், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் யுவராஜ், ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி மீனாட்சி சுந்தரம் உட்பட ஏராளமானோர் ஸ்டேஷனில் குவிந்தனர்.
இந்நிலையில் வி.ஏ.ஓ. கிருஷ்ணன் புகாரில் பிரபாகரன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.