/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
/
சிவகாசியில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
சிவகாசியில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
சிவகாசியில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
ADDED : பிப் 07, 2024 12:27 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் 11 உதவி பொறியாளர்கள், 11 சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர், மேற்பார்வையாளர் என 30 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள 9 ஊராட்சிகளை இணைத்து 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சியில் மேலாளர், கணக்கர், வருவாய் அலுவலர், மேற்பார்வையாளர், நகர் நல அலுவலர், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் தேக்கமடைந்து உள்ளது.
தற்போது சிவகாசி மாநகராட்சியில் நுாற்றாண்டு நிதி ரூ.50 கோடியில் 54 பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.15 கோடியில் 12 பணிகள் , மாநகராட்சி சிறப்பு நிதி ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணி, 15வது மத்திய நிதிக்குழு நிதியில் ரூ.8.50 கோடி மதிப்பில் 40 பணிகள் உட்பட 13 திட்டங்களில் ரூ.121.78 கோடியில் 149 பணிகள் நடந்து வருகிறது.
மாநகராட்சி பொறியியல் பிரிவில் 11 உதவி பொறியாளர்கள், பணி ஆய்வாளர், பணி மேற்பார்வையாளர், தொழிநுட்ப உதவியாளர்கள் என 20 க்கும் மேற்பட்டோர் தேவை. ஆனால் தற்போது ஒரு நகர் பொறியாளர், 2 உதவி பொறியாளர்கள், 1 பணி ஆய்வாளர், 1 மேற்பார்வையாளர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் திட்ட பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.
ஜன. 27 ல் நடந்த கவுன்சில் கூட்டத்தில் பொறியியல் பிரிவில் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 4 தொழிநுட்ப உதவியாளர்களை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிவகாசி மாநகராட்சியில் 11 உதவி பொறியாளர்கள், 11 சுகாதார ஆய்வாளர்கள், 8 தொழில்நுட்ப உதவியாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.