ADDED : அக் 16, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே மேல சின்னையாபுரம் தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., முகாம் கோட்டூரில் துவக்க விழா பள்ளிச் செயலர் சன்ராஜா, ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி தலைமையில் நடந்தது. முதல் நாள் முகாமை தலைமையாசிரியர் ஜெயபால் துவங்கி வைத்தார்.
இம்முகாமில் கண் சிகிச்சை முகாம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், தற்காப்புக்கலை, சாலை பாதுகாப்பு ஊர்வலம், யோகா, பேரிடர் மேலாண்மை, டெங்கு ஒழிப்பு ஊர்வலம், சைபர் கிரைம் பயன்பாடு, போதை, புகையிலை ஒழிப்பு ஊர்வலம் உள்பட பல நிகழ்வுகள் நடந்தது.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி, உதவித்திட்ட அலுவலர் ஆனந்தராஜ் செய்தனர்.