/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடமாடும் வாகனம் கவிழ்ந்து விபத்து செவிலியர் காயம்
/
நடமாடும் வாகனம் கவிழ்ந்து விபத்து செவிலியர் காயம்
ADDED : ஜூன் 26, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் பள்ளி குழந்தைகள் சிறார் நலத்திட்ட பிரிவு ஆர்.பி.எஸ்.கே., நடமாடும் வாகனத்தை திம்மன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிமாறன் ஓட்டினார். நேற்று காலை 11:30 மணிக்கு ஆய்வுக்கு சென்றனர். அப்போது முடியனுார் விலக்கு அருகே ரோட்டின் குறுக்கே நாய் சென்றதால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விலகி செல்ல முயன்றதில் பாலத்தில் மோதி, கண்மாய்க்குள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடன் சென்ற செவிலியர் மகாலட்சுமி 58 காயமடைந்தார். டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.