செவிலியர்கள் செப்.30ல் உண்ணாவிரதம் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு
செவிலியர்கள் செப்.30ல் உண்ணாவிரதம் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு
ADDED : செப் 24, 2026 12:21 AM
விருதுநகர்: மருத்துவத்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்யக்கோரி செப்.30ல் சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமர்த்துவது, புதிதாக துவங்கப்பட உள்ள 6 நர்சிங் கல்லுாரிகளில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் ஒப்பந்த முறையில் நிரப்பும் முடிவு, செவிலியர்களை பிற மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்யும் அரசாணையை தமிழக அரசு கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மருத்துவத்துறையில் தற்காலிக ஒப்பந்த முறையில் பணி செய்யும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி செப்.28, செப்.29ல் செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள், கல்லுாரி மாணவர்களை சந்தித்து பிரசார இயக்கம் நடத்தப்படும்.
இந்த இரு நாட்களும் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து கோரிக்கையை நிறைவேற்றி தர முதல்வர் விஜய்க்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளார்கள். செப்.30ல் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
