/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்த கருத்து அமைச்சருக்கு செவிலியர்கள் கண்டனம்
/
கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்த கருத்து அமைச்சருக்கு செவிலியர்கள் கண்டனம்
கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்த கருத்து அமைச்சருக்கு செவிலியர்கள் கண்டனம்
கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்த கருத்து அமைச்சருக்கு செவிலியர்கள் கண்டனம்
ADDED : ஜூலை 02, 2025 10:20 PM
விருதுநகர்:கொரோனாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிக பணியாளர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன்கூறியதற்கு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் தமிழ்செல்வி அறிக்கை:
2022ல் பொதுசுகாதாரத்துறை லோகோ துவக்கி வைத்த அமைச்சர் சுப்பிரமணியன், கொரோனாவின் போது கிராம சுகாதார செவிலியர்களின் சேவையை பாராட்டியதுடன், துறையின் அச்சாணியாக செயல்படுபவர்கள் என பேசினார்.
ஆனால் தற்போது திண்டுக்கல்லில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதே அமைச்சர் சுப்பிரமணியன், கொரோனாவில் தடுப்பூசி போடமாட்டோம் என கிராம சுகாதார செவிலியர்கள் கூறினார்கள்.
அப்பணியை தற்காலிக பணியாளர்கள் செய்தனர் என பேசியுள்ளார்.
தடுப்பூசி பணிகளை தனியார்மயமாக்க மாநில அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக அமைச்சர் உண்மைக்கு மாறான தகவல்களை பேசியுள்ளார்.
இதற்கு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
மேலும் தமிழக அரசின் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து அமைச்சர், பொதுசுகாதாரத்துறை இயக்குனர், அரசுச் செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கவும் திட்டமிட்டுள்ளோம், என்றார்.