/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபாச நடன பூஜாரிகளுக்கு முன் ஜாமின் மறுப்பு
/
ஆபாச நடன பூஜாரிகளுக்கு முன் ஜாமின் மறுப்பு
ADDED : ஜூலை 02, 2025 10:18 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஆபாச நடனமாடிய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் உதவி பூஜாரி கோமதி விநாயகம் உட்பட 3 பேர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் உதவி பூஜாரி கோமதி விநாயகம், அவரது நண்பர்கள் வினோத், கணேசன் ஆகியோர் ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது.
இதுகுறித்து வழக்கறிஞர் பாண்டியராஜ் கொடுத்த புகாரில் டவுன் போலீசார் கோமதி விநாயகம், வினோத், கணேசன் மற்றும் சிலர் மீதும், அதனை மீடியாவில் பரப்பிய சபரிநாதன் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
முன் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 4 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று முன் தினம் சபரிநாதன் மீதான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோமதிவிநாயகம் உட்பட 3 பேர் மீதான முன்ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.