நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா நடந்தது.
மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன், நர்சிங் கண்காணிப்பாளர் பிரசில்லா இன்ப ரதி முன்னிலை வகித்தனர். முதல்வர் கலா செவிலியர் தின குறிக்கோள் குறித்து பேசினார்.
துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தி பேசி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.