ADDED : ஜன 13, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கருப்பையா, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொருளாளர் முருகானந்தம், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிராஜா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் பேசினர். ஜன. 20 முதல் அனைத்து சத்துணவு மையங்களை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

