/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்துணவு முட்டை எடை குறைவா பி.டி.ஓ.,க்களிடம் புகார் செய்யுங்க
/
சத்துணவு முட்டை எடை குறைவா பி.டி.ஓ.,க்களிடம் புகார் செய்யுங்க
சத்துணவு முட்டை எடை குறைவா பி.டி.ஓ.,க்களிடம் புகார் செய்யுங்க
சத்துணவு முட்டை எடை குறைவா பி.டி.ஓ.,க்களிடம் புகார் செய்யுங்க
ADDED : ஆக 12, 2025 11:28 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவில் வழங்கப்படும் எடை குறைவான முட்டைகளை கண்டறிய குழுக்கள் செயல்பட்டு வருகிறது. புகார்களை பி.டி.ஓ.,க்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.
மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தினசரி சத்துணவுடன் முட்டை சாப்பிட்டு வருகின்றனர். இம்முட்டைகள் குறைந்தபட்சம் 45கிராம் எடை கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் சில முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 2024ல் சிவகாசி ஒன்றியத்தில் மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது சில பள்ளிகளில் சத்துணவு ஊழியர்கள் இது குறித்து புகார் செய்தனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சில முட்டைகள் எடை குறைவாக உள்ளதை கண்டறிந்து உரிய எடையுள்ள முட்டைகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், சத்துணவு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து குறைவான எடையுள்ள முட்டை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.
இதற்கான குழுக்கள் சத்துணவு நேர்முக உதவியாளர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஆகியோரை கொண்டு செயல்படுகிறது. காலாண்டு காலகட்டத்தை அளவீடாக கொண்டு செயல்படுகின்றன.
தரமான, நிர்ணயிக்கப்பட்ட எடையுள்ள முட்டைகளை வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஏதேனும் எடை குறைவாக இருந்தால் அந்தந்த ஒன்றிய பி.டி.ஓ.,க்களிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.