/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் உறுதிமொழி: பாதுகாப்பு விதிகளை பின்பற்ற உத்தரவு
/
பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் உறுதிமொழி: பாதுகாப்பு விதிகளை பின்பற்ற உத்தரவு
பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் உறுதிமொழி: பாதுகாப்பு விதிகளை பின்பற்ற உத்தரவு
பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் உறுதிமொழி: பாதுகாப்பு விதிகளை பின்பற்ற உத்தரவு
ADDED : டிச 06, 2024 04:59 AM
சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., பெற்ற 1080 பட்டாசு ஆலைகள். இதில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்வது குறித்தும், பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்கள், அதிகாரிகளுடன் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவேன். பாதுகாப்பு கட்டமைப்புகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என உறுதிமொழி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
அதில் பட்டாசு ஆலைகளை குத்தகை, உள்குத்தகைக்கு விடமாட்டேன். உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டும் உற்பத்தி செய்வேன். உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி செய்தாலோ, இருப்பு வைத்தாலோ விசாரணையின்றி உரிமத்தை ரத்து செய்யலாம். பட்டாசு ஆலை உரிம வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை மட்டுமே பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத்துவேன்.
திறந்த வெளியிலோ, மரத்தடியிலோ பட்டாசு உற்பத்தி செய்ய மாட்டேன். தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பேன். ஜி.எஸ்.டி., வரியை முறையாக செலுத்துவேன். தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள், தடை செய்யப்பட பட்டாசுகளை உற்பத்தி செய்ய மாட்டேன்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டேன். வெடிபொருள் சட்டத்திற்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்கிறேன். இதில் விதிமீறல் தெரிய வந்தால் உரிமத்தை ரத்து செய்யலாம், உள்ளிட்ட 10 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன் என, ஒவ்வொரு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் சம்பந்தப்பட்ட உறுதிமொழி பிரமாண பத்திரம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.