/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் பாண்டியன் நகரில் ஆக்கிரமிப்பு
/
விருதுநகர் பாண்டியன் நகரில் ஆக்கிரமிப்பு
ADDED : செப் 17, 2025 03:33 AM

விருதுநகர், : விருதுநகர் பாண்டியன் நகரில் மல்லாங்கிணர் ரோட்டில் இருபுறமும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது.
விருதுநகர் அருகே பாண்டியன் நகர் ரோசல்பட்டி ஊராட்சியில் இருந்தாலும் நகர் பகுதிக்கு அருகே இருப்பதால் குடியிருப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகராட்சியில் உள்ள கடைகளின் எண்ணிக்கை போல மல்லாங்கிணர் ரோட்டில் இருபுறமும் கடைகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஆனால் பெரும்பாலானவர்கள் தங்களின் கடைகளுக்கு முன்னால் உள்ள இடத்தில் தகர செட் அமைத்து ரோடு வரை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் மாநில நெடுஞ்சாலை ரோடான இடத்தில் இருபுறமும் மண் நிறைந்து இருப்பதால் ரோடு குறுகிய நிலையில் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் பாண்டியன் நகர் ரோட்டை கடந்து வாகனங்களில் செல்வது சிரமமான ஒன்றாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய ரோடாக இருந்தும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலையே உள்ளது.
பாண்டியன் நகரில் ரோட்டில் இருபுறமும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சர்வசாதாரணமாக நடக்கும் ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே பாண்டியன் நகர் ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.