/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அக். 23ல் போராட்டம் நடத்த கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் முடிவு
/
அக். 23ல் போராட்டம் நடத்த கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் முடிவு
அக். 23ல் போராட்டம் நடத்த கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் முடிவு
அக். 23ல் போராட்டம் நடத்த கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் முடிவு
ADDED : அக் 20, 2024 06:36 AM

விருதுநகர் : விருதுநகரில் கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில் நிர்வாகக்குழு தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி, துணைச் செயலாளர்கள் பலவேசம், அழகர், மாவட்ட செயலாளர் வில்லியாழ்வாளர், பொருளாளர் வெள்ளைப்பாண்டியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள், கொள்கைகள் வகுத்தல், மாநில தேர்தல் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயலாளர் செல்வன் பேசியதாவது:
கிராம நிருவாக அலுவலர்கள் 3 பேருக்கு பணிபுரியும் கிராமத்தில் தங்கவில்லை என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் குற்ற குறிப்பானை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த கொள்கை முடிவை பின்பற்றாமல் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இதை கண்டித்து அக். 23ல் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தவும், தீர்வு கிடைக்காத பட்சத்தில் மண்டல, மாநில அளவில் போராட்டத்தை விரிவுப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.