/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடை, ரோட்டில் குப்பை சுகாதாரக்கேடால் அவதி
/
ஓடை, ரோட்டில் குப்பை சுகாதாரக்கேடால் அவதி
ADDED : பிப் 19, 2024 05:48 AM

சிவகாசி: திருத்தங்கல் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உள்ள ஓடை, ரோட்டில் கொட்டப்படும் குப்பையால் நோயாளிகள், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
திருத்தங்கல் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உறிஞ்சிகுளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை உள்ளது.
இந்த ஓடை துார்வாரப்பட்டு தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தந்த நிலையில் இப்பகுதி கடைகள், குடியிருப்புகளின் குப்பை ஓடையிலேயே கொட்டப்படுகின்றது.
தவிர ஒரு ஓடை அருகே மருத்துவமனை செல்லும் ரோட்டிலும் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பையில் மாடு போன்ற கால்நடைகள் தீவனத்திற்காக வந்து போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுத்துகிறது.
தவிர ஓடையை கடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரக் கேட்டாலும் இப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.
இதனைக் கடந்து மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள், அப்பகுதி குடியிருப்புகளுக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே ஓடை, ரோட்டில் கொட்டப்படுகின்ற குப்பைகளை அகற்ற வேண்டும். மீண்டும் கொட்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

