ADDED : மார் 05, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : நரிக்குடி மறையூரில் நிழற்குடையில் தண்ணீர் பீறிட்டதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய கோரி விருதுநகரில் வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10 மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் விஜயபாஸ்கர் பேசினார். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தினர் பங்கேற்றனர்.
கலெக்டரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் இந்த பிரச்னையை மாநில அளவில் கொண்டு செல்வதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

