UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நவ. 18, 19 ல் விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகக் கட்டடத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டரங்கில்) நடக்கிறது.
பயிலரங்கம், கருத்தரங்கத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ,அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள், மொழி வல்லுநர்கள் பங்கேற்று, தமிழ் மொழியின் தொன்மை, ஆட்சிமொழிக்கான தகுதி, ஆட்சிமொழிச்சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் எழுதுதல், வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கலைச் சொல்லாக்கம் போன்ற தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர். இப்பயிலரங்கில் அரசு அலுவலர், பணியாளர்கள், கலந்து கொள்ள வேண்டும், என்றார்.
