/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப வாங்கும் பணி; அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்கள் சுறுசுறுப்பு

ADDED : நவ 20, 2025 03:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட
எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வாங்கும் பணியில் ஓட்டு சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2026 ஜனவரி 1ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 4ம் தேதி முதல் துவங்கியது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு அதற்கான படிவங்களை வழங்கும் பணியில் கடந்த 15 நாட்களாக ஓட்டு சாவடி அலுவலர்கள் களப்பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப பெரும் பணியில் ஓட்டு சாவடி அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று வரை 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சி முகவர்கள் பெற்று ஓட்டு சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், அரசியல் கட்சிகளின் முகவர்களும் படிவங்களை திரும்ப பெற தீவிரம் காட்டி வருகின்றனர்.
அனைத்து ஓட்டு சாவடிகளிலும் திமுகவினர் தீவிரமாக பணியாற்றும் வருகின்றனர்.