ADDED : நவ 20, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : வெம்பக்கோட்டை ஆலங்குளத்திலிருந்து வளையப்பட்டி வழியாக மேலான்மறை நாடு, அப்பைய நாயக்கன்பட்டி செல்லும் ரோடு வளையப்பட்டியில் சேதம் அடைந்துள்ளது.
இப்பகுதியினர் நேற்று காலை 7:00 மணி அளவில் வளையபட்டியில் ௨ மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

