/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட அதிகாரிகள்
/
பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட அதிகாரிகள்
ADDED : ஜன 22, 2025 09:22 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் மருங்கூர் பாசன கண்மாயில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ராஜபாளையம் மருங்கூர் கண்மாய் பாசன பகுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த கேசவ ராஜா 18 ஏக்கரில் நெற்பயிர் பயிரிட்டு இருந்தார். அறுவடை செய்யவிருந்த நிலையில் திடீர் மழையால் வயலில் நெற்பயிர்கள் மூழ்கியது.
இதனுடன் கண்மாய், அருகாமை விவசாய பகுதி வடிநீர் தேங்கியதால் தேங்கும் தண்ணீரில் முற்றிய நெல் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதுடன் எதிரொலியாக வேளாண் உதவி இயக்குனர் திருமலைசாமி, அலுவலர் முனியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிப்பு குறித்து கணக்கிட்டனர்.