தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரிசி ஆலைகள், மாவு மில்களில் அதிகாரிகள் சோதனை

அரிசி ஆலைகள், மாவு மில்களில் அதிகாரிகள் சோதனை

அரிசி ஆலைகள், மாவு மில்களில் அதிகாரிகள் சோதனை


ADDED : செப் 28, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி, செப். 29-

காரியாபட்டி பகுதியில் உள்ள அரிசி ஆலைகள், மாவுமில்களில் ரேஷன் அரிசி பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத் தலைமையில் பறக்கும் படை தனித் தாசில்தார் திருக்கண்ணன், காரியாபட்டி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயராஜ் சோதனையில் ஈடுபட்டனர்

காரியாபட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்த இ.கே.ஒய்.சி சிறப்பு முகாமில், குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கை விரல்களை அப்டேட் செய்வதை அதிகாரிகள் பார்வையிட்டனர். மாநில நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உள்ள பொருட்களின் தரம் குறித்தும், எடை அளவு குறித்தும் , பட்டாசு விற்பனை நிலையங்களில் உள்ள தீயணைப்பு கருவி காலாவதி முடிவுற்றதா என்பது குறித்தும், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும், உரிமங்கள் பெறப்பட்டு நடத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிவஞானபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது, பதுக்கி வைத்திருந்த 450 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us