/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அப்பாடா.. 20 ஆண்டுகளுக்குப்பின் சீரான மின்சாரம்: மக்கள் மகிழ்ச்சி
/
அப்பாடா.. 20 ஆண்டுகளுக்குப்பின் சீரான மின்சாரம்: மக்கள் மகிழ்ச்சி
அப்பாடா.. 20 ஆண்டுகளுக்குப்பின் சீரான மின்சாரம்: மக்கள் மகிழ்ச்சி
அப்பாடா.. 20 ஆண்டுகளுக்குப்பின் சீரான மின்சாரம்: மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 03, 2025 04:53 AM
நரிக்குடி நரிக்குடி பிரண்டைகுளம், சீனிக்காரனேந்தல் கிராமங்களுக்கு சீராக மின் சப்ளை செய்ய தனி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது. 20 ஆண்டு கனவு நிறைவேறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நரிக்குடி பிரண்டைகுளம், சீனிக்காரனேந்தல் கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சிவகங்கை மாவட்ட எல்கையை ஒட்டி அமைந்துள்ளது. இரு கிராமங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர மின்சாரம் கிடைக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் இருளில் தவித்து வந்தனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். சீராக மின்சாரம் வழங்க வேண்டி நரிக்குடி மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், யாரும் கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மின்கம்பங்கள் நட்டு, தனி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது. நேற்று சீராக மின்சாரம் கிடைத்ததால் மின்சாதன பொருட்கள் நல்ல முறையில் இயங்கி, விளக்குகள் பிரகாசமாக எரிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 20 ஆண்டு கனவு நிறைவேறியதால் மானாமதுரை மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.