/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கையை செப். 30 க்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தல்
/
பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கையை செப். 30 க்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கையை செப். 30 க்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கையை செப். 30 க்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2025 01:47 AM
விருதுநகர்;தமிழக அரசு சார்பில் பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட மூவர் குழு செயல்திட்டங்களை கருத்து கேட்புகளை முடித்து செப். 30க்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி சமர்ப்பிக்க முன் வர வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசு சார்பில் ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., தலைமையில் மூவர் குழு நியமிக்கப்பட்டது. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டங்கள்,கருத்து கேட்புகளை முடித்து செப். 30க்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தி.மு.க., அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜாக்டோ ஜியோ வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் செய்து முடிப்பர் என்ற நம்பிக்கையில் செப். 30ஐ எதிர்நோக்கி உள்ளோம். குழுவானது அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் குழு, கால நீட்டிப்பு கேட்கவும் கூடாது, தமிழக அரசு கொடுக்கவும் கூடாது என்பதை களச் சூழ்நிலையுடன் பதிவு செய்கிறோம்.
அறிக்கையை விரைவில் பெற்று தமிழக அரசு மீண்டும் ஆராய்வதற்கு காலம் எடுத்துக் கொள்ளாமல் கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் நம்பிக்கையும் உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறோம் என்றார்.