/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்
/
சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்
சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்
சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்
ADDED : மார் 18, 2025 06:41 AM
சாத்துார்: சாத்துார் அருகே வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.13 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்தவர் ஸ்டாலின் ,35.இவரது உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் தனது உறவினர்கள் 16 பேருடன் வேனில் திருமங்கலம் சென்றார்.
கங்கைகொண்டானைச் சேர்ந்த வேன் டிரைவர் ராம்குமார் வேனை ஓட்டி வந்தார். வேன் நள்ளி விலக்கு அருகே நேற்று காலை 10:00 மணிக்கு வந்தபோது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் கவிழ்ந்தது.
ஸ்டாலின் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். வேனில் வந்த 13 பேர் காயமடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.