/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எம்.எல்.ஏ., குடும்பத்தினர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
/
எம்.எல்.ஏ., குடும்பத்தினர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
எம்.எல்.ஏ., குடும்பத்தினர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
எம்.எல்.ஏ., குடும்பத்தினர் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஆக 30, 2025 11:49 PM

காரியாபட்டி:ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., காதர்பாட்சா குடும்பத்தினர் சென்ற கார், டூ - வீலரில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கீழ அழகியநல்லுாரை சேர்ந்தவர் லட்சுமணன், 60; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று காரியாபட்டிக்கு டூ - வீலரில் வந்தவர், மாலை, 6:30 மணிக்கு ஹெல்மெட் அணியாமல் வீடு திரும்பினார்.
காரியாபட்டி கரிசல்குளம் விலக்கில், சாலையை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து கமுதி நோக்கி டிரைவர் மணிகண்டன், 32, என்பவர், ஓட்டிச்சென்ற, ராமநாதபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம் குடும்பத்தினர் சென்ற கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த லட்சுமணன், காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.