/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதானி விவகாரத்தை திசைதிருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதம்; எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : நவ 23, 2024 05:58 AM
விருதுநகர்; லோக்சபா கூட்ட தொடரில் அதானி நிறுவனம் செய்த ஊழல் குறித்து இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குரல் கொடுக்க உள்ளோம். இதைதிசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என பா.ஜ., அரசு அறிவித்திருக்கிறது என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
அதானி நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அவரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்து வருகிறது.
ஆசிரியை கொலை, வழக்கறிஞர் மீது தாக்குதல் எல்லாம் தனி நபர் பிரச்னை. இதை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஏற்றுக் கொள்ள முடியாது.
அ.தி.மு.க., கூட்டணி சேர்க்கும் விதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அ.தி.மு.க.,வின் பார்முலாவை காட்டுகிறது.
2009ல் காங். கட்சி ஆட்சியில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 650 ஏக்கர் தேவைப்பட்டது. அதை 8 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சி கிடப்பில் போட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் திருச்சி, கோயம்புத்துார் விமான நிலையங்களை விட மதுரை விமான நிலையம் பின்தங்கி இருந்தது.
சின்ன உடைப்பு கிராமத்தில் நடக்கும் போராட்டத்தை வைத்து மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் முன் நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பு வழங்க வேண்டும், என்றார்.