ADDED : மார் 17, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: சேலத்தை சேர்ந்த சன்ராஜ் 28.
துாத்துக்குடிக்கு டூவீலரில் சென்றார். காரியாபட்டி ஆவியூர் செக்போஸ்ட் அருகே நேற்று அதிகாலை 4:30 மணிக்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, நிலை தடுமாறி விழுந்தார். லாரி ஏறியதில் உடல் நசுங்கி சன்ராஜ் சம்பவ இடத்திலே பலியானார். துாத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமர் 28, ஓட்டினார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

