sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : அக் 10, 2025 06:51 AM

Google News

ADDED : அக் 10, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகாதாரக்கேடு

விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி பாலம்மாள் நகரில் வாறுகால் அடைத்து நிற்கிறது. மழை பெய்யும் போது தெருக்களில் கழிவு நீர் பரவி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும்.

----------ஆரோக்கியராஜ், விருதுநகர்.

சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர்

விருதுநகர் ஆர்.ஆர்., நகரில் சர்வீஸ் ரோடுகளில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டில் கழிவு தேங்குகிறது.

-சத்யா, விருதுநகர்.

ஆமைவேக பணிகள்

விருதுநகர் ஒன்றியம் மன்னார்கோட்டை ஊராட்சியில் துவக்கப்பள்ளிக்கு முன்புறம் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதான பணிகள் ஆமைவேகத்தில் நடக்கிறது.

-முருகன், மன்னார்கோட்டை.

பன்றிகளால் அவதி

சாத்துார் அயன் சத்திரப்பட்டி ஆனந்தா நகரில் பன்றிகள் வீதியில் உலா வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை பிடித்து அகற்ற வேண்டும்.

-பாண்டியன், அயன் சத்திரப்பட்டி.

மினி பஸ் தேவை

என்.மேட்டுப்பட்டி மாயிர்நாதபுரம் வழியாக நென்மேனிக்கும் நென்மேனியில் இருந்து இருக்கன்குடிக்கும் மினி பஸ் இயக்குவதன் மூலம் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எளிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவும் இருக்கன்குடி கோயிலுக்கு செல்லவும் வசதியாக இருக்கும்.

-தனுஷ்கோடி, இருக்கன்குடி.

கால்நடைகளால் பாதிப்பு

சாத்துார் மெயின் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

-முருகன், சாத்துார்.

செயல்படாத வளாகம்

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டும் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராததால் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

-எம்.கணேஷ், திருத்தங்கல்.

சேதமான மின்கம்பம்

சிவகாசி விளாம்பட்டி ரோட்டில் சேதமடைந்த மின்கம்பம் உள்ளது. இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-கே.முத்து, சிவகாசி

ரோடு சேதம்

சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து 56 வீட்டு காலனி வழியாக நாரணாபுரம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. சீரமைக்க வேண்டும்.

- -சரவணன், சிவகாசி.

ரோடு போடப்படுமா

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சி சங்கிலி நகர் மெயின் ரோடு சேரும் சகதியுமாக நடக்க முடியாதபடி உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, அருப்புக்கோட்டை.

நாய்கள் தொல்லை

அருப்புக்கோட்டை மதுரை ரோடு ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் பொதுமக்களும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பயந்து கொண்டே செல்கின்றனர்.

-மாரிராஜ், அருப்புக்கோட்டை

கழிவுநீர் தேக்கம்

திருச்சுழி ஸ்டேட் பாங்க் அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள வாறுகாலில் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- -சுப்புராமன், திருச்சுழி

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆண்டாள் கோவில் செல்லும் வரை உள்ள ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

-சுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்துார்.

சுகாதார வளாகம் இல்லை

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் இலவச சுகாதார வளாக வசதி இல்லாமல் இயற்கை உபாதையைக் கழிக்க இடமின்றி தவிக்கிறோம்.

-சுரேஷ் ஸ்ரீவில்லிபுத்துார்.

கழிவுகளால் அல்லல்

வத்திராயிருப்பு அக்ரஹாரம் தெருவின் பின்பகுதியில் கழிவுகளால் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.

-கணேஷ், வத்திராயிருப்பு.

இடையூறால் பாதிப்பு

காரியாபட்டியில் மதுரை - அருப்புக்கோட்டை ரோட்டில் வெட்டப்பட்ட மரத்தின் துார்இடையூறாக உள்ளது. அப்புறப்படுத்த வேண்டும்.

-வெள்ளைச்சாமி, காரியாபட்டி.

ஆபத்தான தொட்டி

காரியாபட்டி கழுவனச்சேரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் மேல்நிலைத் தொட்டி உள்ளது. விபத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும்.

-சேகர், கழுவனச்சேரி.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

நரிக்குடி ஒட்டங்குளத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-தர்மன், ஒட்டங்குளம்.

பள்ளங்களால் அபாயம்

ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. தீர்வு காண வேண்டும்.

-மாடசாமி, ராஜபாளையம்.

செயல்படாத பிரதிபலிப்பு சிக்னல்

சேத்துார் அருகே தென்காசி தேசிய நெடுஞ்சாலை பெருமாள் கோயில் ஒட்டிய அபாய வளைவில் அமைக்கப்பட்ட பிரதிபலிப்பு சிக்னல் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது.

-சரவணன், சேத்துார்.






      Dinamalar
      Follow us