/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பண மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு
/
பண மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு
பண மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு
பண மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு
ADDED : அக் 10, 2025 09:22 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஆவினில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட 2 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க கோரி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இதில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
சாத்துாரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜயநல்லதம்பி ரூ.30 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார்.
அவரது புகாரில் விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகிய 8பேர் மீது ஒரு வழக்கும்,
ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று கொண்டு தன்னை ஏமாற்றியதாக விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி அவரது நண்பர்கள் உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். இதில் 2022 ஜன. 5ல் ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமினில் வந்தார். முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி, நல்ல தம்பி ஆஜராகவில்லை.
இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் விடுவிக்க கோரி ராஜேந்திரபாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவ.21க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.