ADDED : ஜூலை 26, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் 2014 இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் திருடிய சங்கர நத்தம் அம்மாசி மகன்கள் கருப்பசாமி 42. காளிராஜ் 39 மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்தனர்.
இந்த வழக்கு சாத்துார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் நேற்று முன்தினம் காளிராஜ்க்கும், நேற்று கருப்பசாமி,42க்கும் தலா ஒருவருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.