/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் மழையால் வெங்காய பயிர்கள் சேதம்
/
காரியாபட்டியில் மழையால் வெங்காய பயிர்கள் சேதம்
ADDED : டிச 19, 2024 04:24 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் மழையால் வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதமானது. இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இழப்பீடு வழங்க, தோட்டக்கலை துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவக்கினர்.
காரியாபட்டி பகுதியில் சில தினங்களுக்கு முன் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம், நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்து வெளியிடப்பட்டது.
செய்தி எதிரொலியாக தோட்டக்கலைத் துறையினர், காரியாபட்டி அருகே அரசகுளம், குரண்டி, முஷ்டக்குறிச்சி, எஸ்.மறைக்குளம், பெரிய ஆலங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்களை ஆய்வு செய்து, பயிர் மகசூல் இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டது.
காரியாபட்டி பகுதியில் ஆயிரம் ஏக்கர் வரை பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
தோட்டக்கலைத் துணை இயக்குனர் சுபா வாசுகி தலைமையில், உதவி இயக்குனர் கார்த்திக், அலுவலர்கள் கீர்த்தனா, அகல்யா, நந்தினி, முடுக்கன்குளம் வருவாய் அலுவலர்கள் மாதவி, புவனேஸ்வரி, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெங்காய பயிர் இழப்பீடு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பயிர் சேதம் அடைந்த விவசாயிகள் அந்தந்த வி.ஏ.ஓ., அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஆதார், குடும்ப அட்டை, பட்டா, அடங்கல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி புத்தக நகல் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்து, இழப்பீடு நிவாரணத்திற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டனர்.