/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அன்று திறந்தவெளி கழிப்பிடம்; இன்றோ பசுமை சோலை விருதுநகர் 16வது வார்டு மக்கள் அசத்தல்
/
அன்று திறந்தவெளி கழிப்பிடம்; இன்றோ பசுமை சோலை விருதுநகர் 16வது வார்டு மக்கள் அசத்தல்
அன்று திறந்தவெளி கழிப்பிடம்; இன்றோ பசுமை சோலை விருதுநகர் 16வது வார்டு மக்கள் அசத்தல்
அன்று திறந்தவெளி கழிப்பிடம்; இன்றோ பசுமை சோலை விருதுநகர் 16வது வார்டு மக்கள் அசத்தல்
ADDED : ஜூலை 28, 2025 03:38 AM

விருதுநகர் : நாட்டில் தொழிற்புரட்சியால் ஆலைகள் எண்ணிக்கையும், காற்று மாசும் தொடர்ந்து அதிகரித்தது. தற்போது டூவீலர், ஆட்டோ, கார்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டுகளை விட காற்று மாசு உயர்ந்துள்ளது.
இதை தடுக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம் உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்தாலும் மரங்களை வளர்த்து பராமரிப்பது தனி மனிதனின் செயலால் மட்டுமே நிகழும்.
நகர், புறநகர், கிராமங்களில் ரோடு ஓரங்கள், கண்மாய் கரைகள், சிறுவர் பூங்காவில் மரங்களை நடவு செய்து பராமரித்து வனமாக மாற்றுவது அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கையிலேயே உள்ளது.
விருதுநகர் நகராட்சியின் 16வது வார்டில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே செல்லும் சத்திய மூர்த்தி ரோடு முழுவதும் ரயில்வே நிர்வாகத்தால் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாற்றப்பட்டு இருந்தது.
இதனால் ரோட்டில் நடந்து, சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டிய நிலையே நிலவியது. இந்த நிலையை மாற்ற இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 2009ல் இருந்து ரயில்வே தடுப்புச்சுவர் அருகே உள்ள ரோட்டில் தென்னை, வேம்பு, வாகை, மாதுளை, கொய்யா, புங்கை, குந்தப்பனை, கல்லால மரம், பார்த்தோடியா, நெட்டிலிங்கம், நாவல், செவ்வரளி உள்பட 60 வகையான பூச்செடி, மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இவை தற்போது நிழல் தரும் மரங்களாக வளர்ந்து சத்தியமூர்த்தி ரோடு சோலை வனமாக மாறியுள்ளது. தற்போதும் புதிய மரங்கள் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படுவதால் திறந்த வெளி கழிப்பிடம், குப்பை கிடங்கு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.