/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தவெளி கழிப்பிடம், வாறுகாலாக மாறிய நீர்வரத்து ஓடை; பரிதவிப்பில் புல்லலக்கோட்டை ஊராட்சி மக்கள்

ADDED : ஆக 19, 2025 12:40 AM

விருதுநகர்,; 20 ஆண்டுகளாக சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளிகழிப்பிடங்கள் அதிகரிப்பு, நீர்வரத்து ஓடைகள் தற்போது கழிவு நீர் செல்லும் வாறுகாலாக மாற்றம் என எண்ணற்ற பிரச்னைகளால் பரிதவிப்பில் உள்ளனர் விருதுநகர் புல்லலக்கோட்டை ஊராட்சி மக்கள்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புல்லலக்கோட்டை ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் கண்மாய் கரைகள், ரோடுகள் திறந்த வெளிக்கழிப்பிடங்களாக மாறியுள்ளது. நீர்வரத்து ஓடைகள் கழிவு நீர் வடிந்து செல்வதற்கான வாறுகாலாக மாற்றப்பட்டுள்ளதால் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை.
ஊராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் விளையாடும் சறுக்குகள், ஊஞ்சல் சேதமான நிலையில் உள்ளது. பள்ளி அருகே விளையாட்டு மைதானம் முறையாக அமைக்கப்படாததால் கம்பிகள் முறிந்து விழுந்து மைதானம் பயன்படுத்த முடியாமல் பாழாகும் நிலையில் உள்ளது.
கண்மாய் மராமத்து பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. பருவமழை துவங்கும் முன் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்லலக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் ரோட்டில் 3 மது பான கடைகள் இருப்பதால் பெண்கள் சிரமப்படுகின்றனர். நடுத்தெரு, ஆதிதிராவிடர் பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லை. மெயின் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவதால் ரோடு குறுகலாகியுள்ளது.