/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த நிலையில் தரைமட்ட தண்ணீர் தொட்டி
/
திறந்த நிலையில் தரைமட்ட தண்ணீர் தொட்டி
ADDED : டிச 01, 2024 05:52 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே பாறைக்குளத்தில் திறந்த நிலையில் தண்ணீர் தொட்டி அமைத்து மூடி போடாமல் இருப்பதால் குப்பை விழுந்து சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த, கீழ்க்கண்டமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட பாறைக்குளம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தரைமட்ட தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் தொட்டியில் பாதுகாப்பாக மேல் மூடி போடாமல் இருப்பதால், காற்றில் பறந்து குப்பைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்து சுகாதார கேடாக உள்ளது.
இந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தும் போது பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிக்க அமைக்கப்பட்ட குழாய்களும் சரியாக இல்லை.
லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்தும் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் சுகாதார கேடாக இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தொட்டியை பாதுகாப்பாக மூடி வைத்து மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.