/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சித்துராஜபுரத்தில் திறந்த வெளி கிணறு * வாகன ஓட்டிகள் அச்சம்
/
சித்துராஜபுரத்தில் திறந்த வெளி கிணறு * வாகன ஓட்டிகள் அச்சம்
சித்துராஜபுரத்தில் திறந்த வெளி கிணறு * வாகன ஓட்டிகள் அச்சம்
சித்துராஜபுரத்தில் திறந்த வெளி கிணறு * வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 20, 2024 04:16 AM

.சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி சித்துராஜபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டின் ஓரத்திலேயே பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறு உள்ளது. இதன் அருகே குடியிருப்புகள் இருப்பதோடு துணை சுகாதார நிலையம் இயங்குகின்றது. மேலும் திறந்த வெளி கிணறை கடந்து தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளிக்கு மாணவர்கள், ரேஷன் கடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் ரோட்டை ஒட்டி உள்ள கிணற்றில் தடுப்புச் சுவர் இல்லை. ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் சற்று கவனம் சிதறினாலும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கிணற்றுக்குள் விழ வேண்டும். தவிர தற்போது கிணறு குப்பைக் கிடங்காகவும் மாறிவிட்டது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே பயன்பாட்டில் இல்லாத கிணற்றினை மூட வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.